அமைச்சர் செந்தில்பாலாஜி என் உறவினர் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


நானும், திமுக அமைச்சர் செந்தில்பாலாஜியும் ஒரே கோவிலுக்கு செல்பவர்கள், இருவரும் உறவினர்கள் என்று பாலாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை மேலும் தெரிவிக்கையில், "வருமான வரித்துறை சோதனை நடந்த நபர்களில் எனக்கு நேரடி தொடர்பு இல்லை. அவர்கள் என் ரத்த சொந்தமும் இல்லை.

ஆனால், கொங்கு பகுதியில் பொதுவாக அனைவரும் உறவினர்களாகவே இருப்பார்கள். நானும், செந்தில்பாலாஜியும் உறவினர்கள். 

இருவரும் ஒரே கோவிலுக்கு செல்வோம். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, செந்தில்பாலாஜி எனது வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டுள்ளார்.

அதேபோல், நானும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் உறவினர்கள். அரசியலுக்கு முன்பு, ஜோதிமணி அக்கா வீட்டிற்கு சென்று சாப்பிட்டு உள்ளேன்.

கோவையில் கடந்த ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பாதி பேர் எனது உறவினர்கள். இந்த சோதனைகளில் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை. அது தவறு, கேள்வி எழுப்பலாம்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். நான்கு மாவட்டங்களில் புதிய பாஜக அலுவலகங்களை திறந்து வைப்பார். வருகை தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும், கேப்டன் விஜயகாந்தின் குருபூஜையில் பாஜக உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai Say About DMK Senthilbalaji


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->