திமுக ஆட்சி, கையாலாகாத ஆட்சி... எஸ்ஐ அடித்து கொலை... கொந்தளிக்கும் அண்ணாமலை!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin SSI murder issue
கடந்த 18 ஆம் தேதியன்று, மது போதையிலிருந்த கும்பலால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாராமன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழகத்தில், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத கையாலாகாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு காவல் அதிகாரியைத் தாக்கி ஒரு வாரம் கடந்தும், இந்தக் குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், இன்னும் கைது செய்யப்படவில்லை என்றால், திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் எவ்வளவு தூரம் செயலிழந்து கிடக்கிறது என்பதை உணர முடியும்.
கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், போதைப்பொருள்கள் கடத்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள், கிட்னி திருடுபவர்கள், பாலியல் குற்றவாளிகள் என, திமுக ஆட்சி நடத்துவதே சமூக விரோதிகளுக்காகத்தான். நான்கு ஆண்டு ஆட்சியில், தமிழகத்தை ஐம்பது வருடம் பின்னோக்கிக் கொண்டு சென்றிருப்பதுதான் திமுகவின் சாதனை.
உடனடியாக, துணை ஆய்வாளர் திரு. ராஜாராமன் அவர்கள் மரணத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத நிலையில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின், இதற்கு என்ன விளக்கமளிக்கப் போகிறார் என்று எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin SSI murder issue