ஹைதராபாத் அருகே சாலை விபத்து: உளவுத்துறையைச் சேர்ந்த டி.எஸ்.பி.,க்கள் இருவர் உயிரிழப்பு..!
Two DSPs from the intelligence department died in a road accident near Hyderabad
தெலுங்கானாவின் ஹைதராபாத் அருகே நடந்த சாலை விபத்தில், ஆந்திராவை சேர்ந்த இரண்டு டி.எஸ்.பி.,க்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆந்திர உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், வேலை நிமித்தமாக ஆந்திராவின் விஜயவாடாவிலிருந்து தெலுங்கானாவின் ஹைதராபாதிற்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.
ஹைதராபாதில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள சவுட்டுப்பல் என்ற இடத்தில் முன்னால் சென்ற வாகனம் ஒன்று திடீரென நின்றுள்ளது. அந்த வாகனத்தின் இவர்கள் சென்ற கார் மீது மோதாமல் இருக்க முயன்றுள்ளனர். அப்போது , போலீசார் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி எதிர்புறம் விழுந்துள்ளது.
அப்போது எதிர்திசையில் இருந்து வந்த வாகனம் மோதியதில், உளவுத்துறையில் பணியாற்றிய இரண்டு டி.எஸ்.பி.,க்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், ஏ.டி.எஸ்.பி., மற்றும் வாகன ஓட்டுநர் காயமடைந்துள்ளனர். தற்போது அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சிங்கப்பூர் பயணம் தொடர்பான பணிக்காக சென்றதாக கூறப்படுகிறது.
English Summary
Two DSPs from the intelligence department died in a road accident near Hyderabad