"ஓய்வுக்குப் பிறகு ஊபர் டிரைவராக ஆசை " -பகத் பாசில்
I want to be an Uber driver after retirement fahadh faasil
அண்மையில் நேர்காணல் ஒன்றில் கருத்தை பகிர்ந்த பகத் பாசில்," சினிமாவிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு பார்ஸிலோனாவில் ''ஊபர்'' டிரைவராக விருப்பம்" எனத் தெரிவித்தார்.மேலும், பகத்பாசில் தற்போது வடிவேலுவுடன் ''மாரீசன்'' படத்தில் நடித்திருக்கிறார். இதில் நேற்று திரைக்கு வந்த இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனிடையே இப்படத்தின் புரமோஷனின்போது தனது ஓய்வுக்கு பிந்தைய வாழ்வு குறித்து தெரிவித்தார்.அப்போது அவர் தெரிவிக்கையில்,"ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்துவிட்டால், பார்ஸிலோனாவில் ''ஊபர்'' டிரைவராகிவிடுவேன். மக்களை ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்கு அழைத்து கொண்டு போய் சேர்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
ஒருவர் சென்றடையும் இலக்கை அறிந்துகொள்வது மிக அழகான விஷயம்'' என்று தெரிவித்தார்.மேலும், வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'மாமன்னன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து 'மாரீசன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆர்பி சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.
மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா,சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, டெலிபோன் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
English Summary
I want to be an Uber driver after retirement fahadh faasil