பொதுநல வழக்கு: ''காசாவைப் பற்றி கவலைப்படாதீர்கள்; முதலில் இந்தியாவை பாருங்கள்'': மா.கம்யூ கட்சிக்கு உயர் நீதிமன்றம் பதிலடி..!
Dont worry about Gaza look at India first says High Court
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் இனப்படுகொலை செய்வதாகக் கூறி, மா.கம்யூ கட்சி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ''காசாவைப் பற்றி கவலைப்படாதீர்கள்; முதலில் இந்தியாவை பாருங்கள்'' என அதிரடியாக தெரிவித்துள்ளது.
குறித்த மனுவில், இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரத்தில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும், குறிப்பாக ராணுவ தளவாடங்கள் தொடர்பான ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய் மற்றும் நீதிபதி ஆரிஃப் டாக்டர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதன்போது மனுதாரர் தரப்பைக் கடுமையாகச் சாடிய நீதிபதிகள், ‘உங்களுக்கு காசா பற்றி ஏன் இவ்வளவு கவலை..? முதலில் இந்தியாவைப் பாருங்கள். மகாராஷ்டிராவில் பிரச்சினைகளே இல்லையா..? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன், குறித்த மனுவில் எந்தப் பொதுநலமும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்ட மனுவாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாட்டுக் கொள்கை என்பது ஒன்றிய அரசின் பிரத்யேக அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனவும் நீதிமண்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, அரசியல் விளம்பரங்களுக்காகப் நீதிமன்றங்களை பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், நீதிமன்றத்தின் கடுமையான நிலைப்பாட்டால், மா.கம்யூ கட்சியின் வழக்கறிஞர், தான் தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரினார். இதை ஏற்ற நீதிமன்றம், அந்தப் பொதுநல மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Dont worry about Gaza look at India first says High Court