பொதுமக்களுக்கு எச்சரிக்கை: 03 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: கேரளாவில் 05 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்..!
Red alert for 03 districts in Kerala and rain warning for 05 days
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ள நிலையில், அங்கு 03 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அடுத்த 05 நாட்களுக்கு கேரளாவில் மழை தொடரும் என்றும், நாளையும் 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. எனவே, இன்று முதல் 30-ஆம் தேதி வரையில் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 03 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தினம்திட்டா, கோட்டயம், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மிக கனமழைக்கு (ஆரஞ்ச் அலர்ட்) வாய்ப்புள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழாவில் கன மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் தெரிவிப்பட்டுள்ளது.
இன்று கொச்சியில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
English Summary
Red alert for 03 districts in Kerala and rain warning for 05 days