திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி: கூட்டணிக்கு பின் இதுவே முதல்முறை..!
Edappadi Palaniswami welcomed Prime Minister Modi at the Trichy airport and spoke
பிரிட்டன் மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரவு 07:50 மணியளவில் துாத்துக்குடி விமான நிலையம் வந்திறங்கினார். அங்கு புனரமைக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனைய கட்டடத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். அத்துடன், ஆறு வழிச்சாலைகளையும், ரயில் திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருச்சி சென்ற பிரதமர் விமான நிலையத்தில் மோடியை அ.தி.மு.க, பொதுச்செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள், வீரமணி, வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க, நிர்வாகிகள், தமிழக ஆளுநர் ரவி, தமிழக அமைச்சர் நேரு, வைகோ, ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் மோடியை வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தில், பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்தார். அவருடன், துணை பொதுச் செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் சந்தித்தனர்.
அதிமுக - பாஜ கூட்டணி அமைந்ததும் மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.பின்னர் இரவு 10: 30 மணியளவில் பிரதமர் மோடி ஒய்வெடுப்பதற்காக திருச்சி தனியார் விடுதிக்கு புறப்பட்டு சென்றார்.
English Summary
Edappadi Palaniswami welcomed Prime Minister Modi at the Trichy airport and spoke