புதிய உபகழிவு நீரேற்று நிலையம்..பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி!  - Seithipunal
Seithipunal


மதுரை மாநகராட்சி“புதிய உபகழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை”மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில்நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.63 பெத்தானியாபுரம் பகுதியில் புதியஉபகழிவுநீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையும் மற்றும் மழைநீர் வடிகால்களைதூர்வாருவதற்கு புதிய வாகனத்தை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்திரு.பி.மூர்த்தி அவர்கள் இன்று (10.10.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை
வகித்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 க்கு உட்பட்ட வார்டு எண்.63, 64, 65 ஆகிய வார்டு
பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் பைபாஸ் சாலையின் அருகில் உள்ள பெத்தானியாபுரம்உபகழிவுநீரேற்று நிலையத்திற்கு வந்தடைகிறது. உபகழிவுநீரேற்று நிலைய கிணற்றின்கொள்ளளவு குறைவாக இருப்பதால் கழிவுநீர் சென்று அடைவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவேஅப்பகுதி பொதுமக்களின் வசதிக்காக மண்டலம் 2 வார்டு எண்.63 பெத்தானியாபுரம் சர்வீஸ்
ரோடு பகுதியில் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் புதிய உபகழிவுநீரேற்று நிலையம் அமைப்பதற்கானபூமி பூஜை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தஉபகழிவுநீரேற்நு நிலையம் அமைக்கப்பட்ட உடன் வார்டு எண்.63, 64 மற்றும் 65ஆகிய வார்டுப் பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்விரைவாகவும் சீராகவும் புதிய உபகழிவுநீரேற்று நிலையத்திற்கு வந்தடையும்.மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டுப் பகுதிகளில் உள்ளசாலையோர மழைநீர் வாய்க்கால்களில் தூர்வாருவதற்கு ஏற்கனவே ஐந்து மினி எஸ்குவேட்டர்(Mini Excavator) வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தனியார் நிறுவனத்தின்
பங்களிப்பின் மூலம் ரூ.7.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய மினி எஸ்குவேட்டர் வாகனம்
வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மண்டலம் 5 க்கு உட்பட்ட வார்டுப்பகுதிகளில்
பயன்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய வாகனத்தை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இன்றுகொடியசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில்பணிபுரிந்த வந்த திருமதி.பழனியம்மாள், திரு.குருராஜன், திருமதி.வீரம்மாள் ஆகியோர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காலமாகி விட்டார்கள்.அன்னாரின் குடும்பத்தார்களுக்கு அவர்லேண்ட் தனியார் நிறுவனத்தின் மூலம் இறப்பு காப்பீடுநிதியாக தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சத்திற்கானகாசோலையினை அன்னாரின் குடும்ப உறுப்பினர்களிடம் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்திரு.காமராஜ், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக். உதவிப்பொறியாளர் திருமதி.மல்லிகா,உதவிப்பொறியாளர் (வாகனம்) திரு.அமர்தீப், மாமன்ற உறுப்பினர் திரு.சோலை செந்தில்குமார்,
மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A new sewage lifting station Minister Murthi started the work after performing a groundbreaking ceremony


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->