விருதுநகரில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; பீதியில் சாலையில் தஞ்சமடைந்த மக்கள்..!
An earthquake of 3 magnitude struck Virudhunagar
மதுரை -விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இன்று இரவு 09 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3 ஆக மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டுள்ளது. சில நொடிகள் நீடித்த இந்த நில அதிர்வினால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
யாரும் எதிர்பாராக நிலையில், திடீரென ஏற்பட்ட நில அதிர்வினால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்ககத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
English Summary
An earthquake of 3 magnitude struck Virudhunagar