'சாரா அலி கானின் தாயார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்'; ஓரி-யின் நிபந்தனையால் பரபரப்பான பாலிவுட்.!
Bollywood is abuzz due to Oris condition that Sara Ali Khans mother must publicly apologize
பாலிவுட் திரையுலகில் நட்சத்திர வாரிசுகளின் நெருங்கிய நண்பராக இருப்பவர் சமூக வலைதளப் பிரபலம் ஓர்ஹான் அவத்ரமணி. ஓரி என்று அழைக்கப்படும் இவருக்கும் நடிகை சாரா அலி கானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகப் பனிப்போர் நிலவி வருகிறது. அதாவது, பொது நிகழ்ச்சிகளில் சாராவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்தது மற்றும் இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்வதை நிறுத்தியது போன்ற ஓரியின் நடவடிக்கைகள் பாலிவுட் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன.
ஓரியின் தொழிலை சாரா அலி கான், வாட்ஸ்அப் குழு ஒன்றில் கிண்டல் செய்ததாகக் 'ரெட்டிட்' என்ற தளத்தில் கசிந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் நேற்ற நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஓரி பேசுகையில் கூறியதாவது:

பழைய பகையை மறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்குச் சாரா அலி கானின் தாயார் அம்ரிதா சிங் என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிரடியாக கூறியுள்ளார். அத்துடன், குழந்தைகளிடம் நான் வன்மத்தை வைத்துக்கொள்வதில்லை. ஆனால், அவர்களைத் தவறாக வளர்த்த பெற்றோர்கள் மீது எனக்குக் கோபம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சாரா அலி கானின் பேச்சில் நச்சுத்தன்மை உள்ளது என்றும் ஓரி குற்றம் சுமத்தியுள்ளது. ஓர்ஹான் அவத்ரமணி இந்த நிபந்தனையால் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாரா அலி கான் தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Bollywood is abuzz due to Oris condition that Sara Ali Khans mother must publicly apologize