உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.. 9277 மனுக்களுக்கு தீர்வு!
Stalin's plan camp with you Solution for 9,277 applications
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினைகடந்த 15.07.2025 அன்று துவக்கி வைத்ததைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்மாநகராட்சிக்குட்பட்ட கோட்டார் எம்.டி.பி சமூக நலக்கூடத்தில் இன்று நடைபெற்றஉங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா,இ.ஆ.ப, அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின்
பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன்ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டம் அக்டோபர் மாதம் 15ம் தேதி வரை நடத்திடஅறிவுறுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட பகுதிபொதுமக்களுக்கு கோட்டார் எம்.டி.பி சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாமினை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. மேலும்மருத்துவ முகாம் நடைபெறும் அரங்கினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 08.10.2025 வரை 270 முகாம்கள்
நடத்தப்பட்டு 1,35,041 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்குஉடனடியாக சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர்மாற்றம், புதிய மின்இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்,தொழிலாளர் நல வாரிய அட்டைகள், குடும்ப அட்டைகளில் பெயர்மாற்றம்முகவரி மாற்றம், ஆதார்
அட்டைகளில் பெயர்மாற்றம், கடனுதவிகள், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட 9277 மனுக்களுக்குதீர்வுகள் மற்றும் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைஏற்படுத்தி கொடுத்திடவும், பெறப்படும் மனுக்களை இணையத்தில் உடனடியாக பதிவேற்றம்செய்யவும் முகாம் ஒருங்கிணைப்பாளர்க்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் உங்கள்வீட்டின் அருகில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று மனுவினை அளித்து தங்களின் தேவைகளுக்கு
தீர்வு காண உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனகேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறுமாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப,அவர்கள் தெரிவித்தார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ், நாகர்கோவில்மாநகராட்சி ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., நாகர்கோவில் மாநகர் நகர்நல அலுவலர்மரு.ஆல்பர் மதியரசு, மண்டலதலைவர் திருமதி.கோகிலா வாணி, துறை அலுவலர்கள், பொதுமக்கள்உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
English Summary
Stalin's plan camp with you Solution for 9,277 applications