பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்த நிர்வாகம்: தற்கொலை செய்து கொண்ட பல் மருத்துவ மாணவி: விடுதியில் சிக்கிய உருக்கமான கடிதம்..!
A letter from a dental student committed suicide due to the college administrations repeated harassment of her by asking for money has been found
ராஜஸ்தானின் உதய்பூரில் தனியார் பல் மருத்துவ கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் ஸ்வேதா சிங், வயது 25. காஷ்மீரைச் சேர்ந்த இவரது தந்தை போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.
உதய்பூரில் விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்வேதா, கடந்த 24-ஆம் தேதி இரவு விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைக்கான காரணம் குறித்து ஸ்வேதா கைப்பட எழுதிவைத்திருந்த கடிதத்தை விடுதியில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் அவர் எழுதியுள்ளதாவது: 'கல்லுாரி ஊழியர்கள் இருவர் கொடுத்த அழுத்தத்தால் தற்கொலை செய்கிறேன். என்னுடன் படித்தவர்கள் பயிற்சியாளர்களாக சென்றுவிட்டார்கள். நான் இன்னும் கடைசி ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறேன். இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டிய தேர்வை, பணத்துக்காக இரண்டு ஆண்டுகளாக நிர்வாகம் நீடிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
-kehq2.png)
அத்துடன், லஞ்சம் தருபவர்களை நிர்வாகம் தேர்ச்சி பெற வைக்கிறதாகவும், அடிக்கடி பணம் கேட்டு நிர்வாகம் தொந்தரவு செய்கிறது மற்றும் பணம் செலுத்த முடியாதவர்களை நிர்வாகம் துன்புறுத்துகிறது என, கடிதத்தில் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மாணவியின் தற்கொலைக்கு காரணமான கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து கல்லுாரி முன், மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது மாணவி குற்றஞ்சாட்டிய ஊழியர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவியின் தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என முழக்கமிட்டனர்.
English Summary
A letter from a dental student committed suicide due to the college administrations repeated harassment of her by asking for money has been found