ராஜபோதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் - கல்வித்துறை எடுத்த அதிரடி முடிவு.!!
school head master suspend for sleeping drunk at school in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோனல் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக நிங்கப்பா என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நிங்கப்பா நேற்று முன்தினம் மதுபோதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்துள்ளார்.
மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள படிக்கட்டு ஒன்றில் படுத்து தூங்கிவிட்டார். இதை பார்த்து பள்ளிக்கு வந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வாலிபர்கள் பள்ளியில் மதுபோதையில் படுத்து தூங்கிய நிங்கப்பாவை தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்தப் புகைப்படம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்பார்க்கும் நெட்டிசன்கள் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்றுக்கொடுக்க வேண்டிய தலைமை ஆசிரியர் நிங்கப்பா குடிபோதையில் தூங்கியது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
இதையடுத்து வட்டார கல்வி அதிகாரி தலைமை ஆசிரியர் நிங்கப்பாவை பணியிடை நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school head master suspend for sleeping drunk at school in karnataga