கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
Girl commits suicide by jumping into wel
தாய்-தந்தையை இழந்த இளம்பெண் மனவேதனையில் விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது,
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியைச் சேர்ந்த சுவேதா (22) என்ற பட்டதாரி இளம்பெண், தனது தாய், தந்தையின் மரணம் காரணமாக மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன் தந்தை மற்றும் 6 ஆண்டுகளுக்கு முன் தாயை இழந்ததால், சுவேதா தனது சித்தப்பா நந்தகுமார் கவனிப்பில் வளர்ந்தார்.
அடிக்கடி தனிமை மற்றும் மனஅழுத்தத்தில் வாழ்ந்த சுவேதா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மாகாணிப்பட்டு பகுதியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு தாய்-தந்தையின் நினைவுகள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மனமுடைந்து, அருகிலுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உடலை கிணற்றில் மிதப்பதை பார்த்த பொதுமக்கள், காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Girl commits suicide by jumping into wel