பிரதமர் மோடி வருகை - களைகட்டும் கங்கைகொண்ட சோழபுரம் கோவில்.!!
prime minister modi today come in gangaikonda cholapuram temple
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் பெருமையை பறைசாற்றும் விதமாகவும், கோவிலில் வழிபாடு செய்வதற்காகவும் பாரதபிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழாட்டிற்கு வருகைத் தந்தார். அதன் பின்னர் அவர் தூத்துக்குடியில் விரிவாக்கம் செயப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்துவிட்டு, திருச்சிக்கு வந்த அவர் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 11 மணிக்கு ஓட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு செல்கிறார். செல்லும் வழியில் பிரதமர் மோடி மக்களை சந்திக்க வாய்ப்புள்ளது. இதற்காக பாரதிதாசன் சாலையின் ஒரு பகுதியில் ரோடு- ஷோ நடத்துவதற்கு வசதியாக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ரோடு ஷோவில் மக்களை சந்திக்கிறார்
-buty2.png)
தொடர்ந்து கோவிலுக்குச் செல்லும் பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. பின்னர், வாரணாசியில் இருந்து கொண்டு வரப்படும் கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்த பின்னர் 3 நிமிடங்களுக்கு கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார்.
இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு பிரதமர் மோடி மதியம் சுமார் 1.45 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது.
English Summary
prime minister modi today come in gangaikonda cholapuram temple