திருச்செந்தூரில் பதற்றம் - ராட்சத அலையில் சிக்கி பெண் பக்தரின் கால் முறிவு..!!
women devotee leg crack in thiruchenthur temple sea
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அங்குள்ள கடலில் இறங்கி உற்சாகமாக குளிக்கவும் விரும்புகின்றனர். இந்த நிலையில், விடுமுறை தினமான நேற்று காலை முதலே கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி ராஜாமணி என்பவர் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்துள்ளார். இதில் ராஜாமணி கடலில் இறங்கி புனித நீராடியபோது திடீரென்று எழுந்த ராட்சத அலை ராஜாமணியை புரட்டி போட்டு கடலுக்குள் இழுத்து சென்றது.

இதைப்பார்த்த சக பக்தர்கள் ராஜாமணியை பத்திரமாக மீட்டனர். இருப்பினும், அலை புரட்டி போட்டதால் கடலுக்குள் இருந்த பாறையில் அவரது வலது கால் மோதி எலும்பு முறிவு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் பணியில் இருந்த திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு போலீசார் காயமடைந்த ராஜாமணியை மீட்டு கோவில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
English Summary
women devotee leg crack in thiruchenthur temple sea