டாக்டராகும் கனவு.. அச்சத்தில் மாணவி எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற நிலையிலும் இடஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா கிடைக்காதோ என அச்சத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம்  காஞ்சீபுரம் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக மாணவர்களின் தற்கொலை அதிகரித்துள்ளது, ஏனென்று சொன்னால் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்கிறனர், சில மாணவர்கள் தேர்வு பயத்தில் அல்லது தோல்வி பயத்தில் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். அது மட்டும் இல்லாமல் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள் உறவினர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைத்து மாணவர்கள் பக்குவம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு எழுதிய மாணவர்களும் சிலர்  தோல்வி பயத்தினால் தற்கொலை கொண்டுள்ளனர்.இந்தநிலையில்  காஞ்சிபுரத்தில்  மாணவி ஒருவர்  அதிக மதிப்பெண் கிடைக்குமா என்று அச்சத்தில் விபரீத முடிவை எடுத்துள்ளார்

காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு காமராஜர் தெரு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சாதிக்  18 வயது மகள்  சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்துவிட்டு, டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு எழுதி 502 மதிப்பெண் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மாணவி தனக்கு அரசு ஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற அச்சத்தில் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் தொழுகை செய்வதாக கூறிவிட்டு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The dream of becoming a doctorThe horrifying decision made by the student in panic


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->