இரு சோழர்களுக்குன் பிரமாண்ட சிலை - பிரதமர் மோடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


இந்தாண்டு, ராஜேந்திர சோழனின் பிறந்த நாள், தெற்காசிய நாடுகள் மீது அவர் நடத்திய படையெடுப்பின் ஆயிரம் ஆண்டுகள், மற்றும் பிரகதீஸ்வரர் கோவிலின் கட்டிடத் தொடக்க நினைவாக மூன்று பெருவிழாக்கள் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டுள்ளன.

தமிழக அரசு சார்பில் விழா கடந்த 23ம் தேதி தொடங்கப்பட்டது. மத்திய தொல்லியல் மற்றும் கலாச்சாரத்துறை சார்பிலும் விழா ஐந்து நாட்கள் விழாக்கோலமாக நடத்தப்பட்டது.

இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்றார். முப்பெரும் விழா தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உரையாற்றினார்.

பின்னர், பிரதமர் மோடியின் வெளியீடுகளில் ராஜேந்திர சோழரின் திருவுருவ நாணயம், திருவாசக உரைநடை நூல், சாகித்ய அகாடமியின் திருமுறை இசை நூல், இசைஞானி இளையராஜா இசையமைத்த பகவத் கீதையின் தமிழ் பாடல் தொகுப்பு ஆகியவை அடங்கும்.

பிரதமர் தனது உரையை "வணக்கம் சோழ மண்டலம்" என தொடங்கி, "நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க" என வணங்கி உரையாற்றினார். நயினார் நாகேந்திரன் பெயருக்கு எழுந்த உற்சாகத்தைப் பாராட்டினார்.

சிவபக்திப் பாடல்களால் ஆனந்தத்தில் மூழ்கியதாக கூறினார். பெருவுடையாரை தரிசித்த பெருமையை உணர்ந்ததாகவும், 140 கோடி மக்களின் நலனுக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்தார்.

தமிழில் பகவத்கீதையை வெளியிட்ட பெருமையை பகிர்ந்தார். சிவ வழிபாடு பற்றிய ஆன்மிகக் கூறுகளையும் தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pm modi announce raja raja chola and rajendra chola statue in tamilnadu


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->