சேனா நாடுகளில் யாரும் செய்திடாத, இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் யாரும் செய்திடாத வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்..!
Shubman Gill has created a historic feat on English soil that no other Indian player has ever achieved in SENA country
இங்கிலாந்துக்கு எதிரான 04-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 02-வது இன்னிங்சில் இந்திய அணியின் கேப்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சத்தம் அடித்துள்ளார். கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி, 90 ரன்களின் ஆட்டமிழந்துள்ளார். இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி வரும் கேப்டன் கில் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 02-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடிய கில், ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த ஆசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் (631), டிராவிட் (602), கோலி (593) ஆகியோர் இந்தப்பட்டியலில் உள்ளனர்.
தொடர்ந்து, 05-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் கே.எல்.ராகுல் 90 ரன்கள் எடுத்த போது, ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் கில் இந்தத் தொடரில் 700 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு அதிகமாக விளாசிய இந்திய வீரர் மற்றும் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
-mfujb.png)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸில் ஒரு டெஸ்ட் தொடரில் 774 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஒரு டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இன்றைய நாள் ஆட்டத்தில் அவர் சத்தம் அடித்ததன் மூலம் சேனா நாடுகளில் தொடரில் நான்கு சத்தம் முதல் கேப்டன் என்ற புதிய சாதனையும் படைத்துள்ளார்.
English Summary
Shubman Gill has created a historic feat on English soil that no other Indian player has ever achieved in SENA country