புத்தரிசி பூஜை: நாளை மறுநாள் சபரிமலை கோவில் நடை திறப்பு!
Buddha Pooja The Sabarimala Temple will open the day after tomorrow
நடப்பு மண்டல மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலையில் அப்பம், அரவணை பிரசாதங்கள் தயாரிக்க 2 லட்சம் லிட்டர் நெய் கொள்முதல் செய்ய கேரள அரசின் பால் உற்பத்தி நிறுவனமான மில் மா நிறுவனத்திடம் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருது.வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நிறை புத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதிஅதாவது நாளை மறுநாள் நடைபெறஉள்ளது. இந்த நிறை புத்தரிசி பூஜையையொட்டி கோவில் நடையை நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி நம்பூதிரி திறந்து வைக்கிறார்.
நிறை புத்தரிசி பூஜைக்காக பாரம்பரிய முறைப்படி பாலக்காடு மற்றும் கொல்லத்தில் இருந்தும் அய்யப்பா சேவா சங்கத்தினர் நெற்கதிர் கட்டுகளை சபரிமலைக்கு தலைச்சுமையாக எடுத்து வருவார்கள்.30-ந் தேதி நிறை புத்தரிசி பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
மேலும் இந்த நெற்கதிர்களை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த நெற்கதிர்களை வீடுகளில் வைத்து பாதுகாத்து வந்தால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைப்பதுடன், நோய் நொடிகள் விலகும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. நிறை புத்தரிசி பூஜை வழிபாடுகளுக்கு பின் அன்றையதினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நடப்பு மண்டல மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலையில் அப்பம், அரவணை பிரசாதங்கள் தயாரிக்க 2 லட்சம் லிட்டர் நெய் கொள்முதல் செய்யப்படும். இதற்காக கேரள அரசின் பால் உற்பத்தி நிறுவனமான மில் மா நிறுவனத்திடம் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Buddha Pooja The Sabarimala Temple will open the day after tomorrow