போர் நிறுத்த ஒப்பந்தம் பேச்சுவார்த்தை: மீண்டும் தாய்லாந்து-கம்போடியா இடையே நீடிக்கும் மோதல்...!
Thailand and Cambodia conflict resumes
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் இடையே போர் நிறுத்தத்திற்கு இருநாடுகளும் ஒப்புதல் தந்துள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார். ஆனாலும், இருநாடுகள் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. கம்போடியா-தாய்லாந்து நாடுகள் இடையே எல்லை பிரச்னையின் எதிரொலியாக மோதல் மூண்டது. இதுவரை இருதரப்பிலும் மொத்தம் 32 பேர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. அமைப்பும், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளும் வேண்டுகோள் விடுத்தன. இந்நிலையில், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். தொடர்ந்து, இருநாடுகளின் தலைவர்களும் மலேசியாவில் நாளை (ஜூலை 28) பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கம்போடியா, தாய்லாந்து நாடுகள் இடைய மீண்டும் சண்டை நீடித்து வருகிறது. மீண்டும் தொடங்கியுள்ள இந்த மோதலுக்கு இருநாடுகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
தாய்லாந்தின் சுரின் மாகாணம் உள்ளிட்ட மக்கள் வசிக்கும் பல இடங்களில் கம்போடியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு மனித உரிமைகளுக்கு எதிராக கம்போடியா நடந்து கொள்வதாக தெரிவித்து, சண்டையை நிறுத்த தயாராக இல்லை என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
English Summary
Thailand and Cambodia conflict resumes