தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவி..அமைச்சர் நாசர் வழங்கினார்!
Minister Nassar provided welfare scheme assistance to the members of the cleanliness workerswelfare board
ஆவடியில் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.13.71 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தாட்கோ வாயிலாக தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் 3 நபர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டைகளையும், 7 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், தமிழ்நாடு சொசைட்டி ஆவடி மாநகராட்சியில் 20 நபர்களுக்கு ரூ.10,00,000 கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். மேலும் தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளாக திருமண உதவித்தொகை 20 நபர்களுக்கு ரூ.82,000, மகப்பேறு உதவித்தொகை 35 நபர்களுக்கு ரூ.2,10,000, கல்வி உதவித்தொகை 14 நபர்களுக்கு ரூ.34,000, இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை 1 நபருக்கு ரூ.25.000, கண் கண்ணாடி வாங்குவதற்கான உதவித்தொகை 40 பயனாளிகளுக்கு ரூ.20,000, ஆக மொத்தம் ரூ.13,71,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையர் ரா.சரண்யா, தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் தி.அரிஷ்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் ர.சரண்யா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Minister Nassar provided welfare scheme assistance to the members of the cleanliness workerswelfare board