''பாரதத்தை மொழி பெயர்க்கக்கூடாது, பாரதம் என்றே குறிப்பிட வேண்டும்'': ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்..!
RSS chief Mohan Bhagwat says bharat should be referred to as Bharat
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய கல்வி தொடர்பான மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:'' பாரதம் என்பது பெயர்ச்சொல். அதனை மொழி பெயர்க்கக்கூடாது. எழுதும் போதும், வாசிக்கும் போதும் பாரதத்தை பாரதம் என்றே குறிப்பிட வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர் மேலும் பேசுகையில், ஒருவர் எந்த இடத்திலும் தனியாக வாழ உதவுவதாக கல்வி இருக்க வேண்டும் என்றும், ஒருவர் வாழ்க்கையில் சுயமாக நிற்கவும், உங்கள் குடும்பத்தை அப்படியே வைத்திருக்கவும் முடியும் என்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
மேலும், மற்றவர்களுக்காக தியாகம் செய்வதையும், வாழ்வதையுமே 'பாரதிய' கல்வி கற்பிக்கிறது என்றும், ஒருவர் சுயநலமாக இருக்க கற்றுக் கொடுத்தால் அது கல்வி கிடையாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அதிகாரத்தையே உலகம் புரிந்து கொள்கிறது. இதனால், பொருளாதார ரீதியில் பாரதம் வலிமையானதாகவும், செல்வந்தராகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில், ''பாரதம் என்பது பெயர்ச்சொல். அதனை மொழி பெயர்க்கக்கூடாது. பாரதம் என்றால் இந்தியா என்பது உண்மைதான். ஆனால்தான், எழுதும்போதும், வாசிக்கும் போதும் பாரதம் என்பதை பாரதமாக இருக்க வேண்டும். பாரதம் பாரதமாகவே குறிப்பிட வேண்டும். பாரதம் என்ற அடையாளம் மதிக்கப்படுகிறது. ஏனென்றால் அது பாரதம். நீங்கள் உங்கள் அடையாளத்தை இழந்தால், உங்களிடம் வேறு எந்தத் தகுதி இருந்தாலும் உலகில் எங்கும் மதிக்கப்பட மாட்டீர்கள். பாதுகாப்பாக இருக்க மாட்டீர்கள். இதுதான் பொதுவிதி.'' என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், சனாதன தர்மம் எழுச்சி பெற வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்றும் சனாதன தர்மம் எழுச்சி பெற, ஹிந்து தேசத்தின் எழுச்சி தவிர்க்க முடியாதது என்று யோகி அரவிந்த் கூறினார். இவை அவரது வார்த்தைகள், இன்றைய உலகிற்கு இந்த தொலைநோக்குப் பார்வை தேவை என்பதை நாம் காண்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, முதலில் பாரதம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று மோகன் பகவத் பேசியுள்ளார்.
English Summary
RSS chief Mohan Bhagwat says bharat should be referred to as Bharat