இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வி கட்டாயம்..!
Arabic language and Islamic education mandatory for Israeli military and intelligence officers
இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் கற்றுக்கொள்வதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7, அன்று ஹமாஸ் தாக்குதலில் உளவுத்துறை தோல்வியடைந்தது.
இதற்கு ஈரான் தொடர்பான விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாகும். எனவே, எதிரி நாட்டின் மொழி மற்றும் மரபுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த முடிவை எடுத்துள்ளதாக உளவுத்துறை (அமான்) தலைமை மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹவுதி மற்றும் ஈராக்கிய பேச்சுவழக்குகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 50 சதவீத வீரர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழி கற்பிக்கப்படும் எனவும், இதன் ஒரு பகுதியாக, காட் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, காட் என்பது ஒரு வகையான போதை தரும் தாவரம். இது ஏமன் மற்றும் பிற அரபு பகுதிகளில் நுகரப்படுவதால் அவர்களின் பேச்சு தெளிவின்மை கொண்டது. இதனால் வீரர்களும் உளவுத்துறை அதிகாரிகளும் காட் எடுக்கும்போது, அவர்களின் பேச்சும் அரேபியர்களைப் போலவே ஒலிக்கிறது. மேலும், அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியை கற்பிக்க ஒரு துறையும் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
English Summary
Arabic language and Islamic education mandatory for Israeli military and intelligence officers