காரசாரமான மிளகாய் வடை...! டீ டைம்ல சூப்பரா இருக்கும்...!
Spicy chilli vada It would be great during tea time
மிளகாய் வடை
தேவையான பொருள்:
பொருள் - அளவு
சிவப்பரிசி, துவரம்பருப்பு - தலா ஒரு கப்
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 8
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை :
முதலில்,சிவப்பரிசி, துவரம் பருப்பை ஒன்றாக சேர்த்து 25 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பின்பு அரிசி - பருப்புடன் பட்டை, லவங்கம், காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
பிறகு, மாவை வழித்தெடுக்கும் முன் பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்த மாவை வடைகளாக தட்டி சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான மிளகாய் வடை தயார்.
English Summary
Spicy chilli vada It would be great during tea time