டிராவில் முடிவடைந்த 04-வது டெஸ்ட் போட்டி: கில், ஜடேஜா அபாரம்: வாஷிங்டன் சுந்தர் முதல் டெஸ்ட் சதம்..! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து அணிக்கு எதிரான 04-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. இன்றைய நாள் ஆட்டத்தில், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 04-வது டெஸ்ட் கிரிக்கெட் மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து அணி 669 ரன்களும் எடுத்தது.

311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 02-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இன்று 05-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் கே.எல்.ராகுல் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கில் சத்தம் அடித்து 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜடேஜா (107), வாஷிங்டன் சுந்தர் (101) இணை, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் சத்தத்தை பூர்த்தி செய்துள்ளார்.

போட்டியில், 15 ஒவர்கள் எஞ்சியிருந்த நிலையில், போட்டியை முன்கூட்டியே முடித்துக் கொள்ள இந்திய வீரர்களிடம் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கேட்டுள்ளார். ஆனால், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா இருவரும் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்ததால், அதனை இந்தியா அணி நிராகரித்தது. 

பின்னர், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சதம் அடித்தனர். அதன் பின்னர் போட்டி முன்கூட்டியே முடித்துக் கொள்ள இரு அணிகளும் சம்மதித்தன. இதனால், 04-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிவடைந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jadeja and Washington Sundar scored centuries in the 4th Test match that ended in a draw


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->