அறிவிப்பு ப்ரோமோ வீடியோ விரைவில்...! STR,வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்...!
Announcement promo video coming soon STR Vetrimaaran collaboration film
முன்னணி நடிகர்களுள் ஒருவரான சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படுகிறார்.இவரது நடிப்பில் வெளிவந்த ''தக் லைஃப்'' திரைப்படம் நாளல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ''வெற்றிமாறன்'' இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.இந்தப் படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார்.
இப்படத்தில் 2 தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
அதுமட்டுமின்றி,படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
English Summary
Announcement promo video coming soon STR Vetrimaaran collaboration film