பெண்களுக்கான நிதியுதவி திட்டத்தில் 14 ஆயிரம் ஆண்கள் உதவி பெற்று மோசடி: மஹாராஷ்டிராவில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை 14 ஆயிரம் ஆண்களும் பெற்று மோசடி செய்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள பெண்களுக்காக மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் ' லடிகி பஹின் யோஜனா ' என்ற திட்டத்தை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. 2024 சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் துறை ஆய்வு செய்ததில், 14,298 ஆண்கள் இந்த உதவித்தொகையை பெற்றுள்ளனர். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  குறித்த ஆண்கள் முறைகேடாக பெண்களை போல் பதிவு செய்து கடந்த 10 மாதமாக மொத்தம் ரூ.21.4 கோடி நிதியை பெற்று வந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளதாவது:  பெண்கள் நலனுக்காக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆண்கள் ஏன் இந்த திட்டத்தில் பணத்தை பெற்றுள்ளனர் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  அத்துடன், அவர்களிடம் இருந்து அந்த பணம் திரும்பப் பெறப்படும் என்றும்,  இல்லை என்றால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தில், தகுதியில்லாத பெண்களும் சேர்க்கப்பட்டதால் முதல் ஆண்டில் மாநில அரசுக்கு ரூ.1,600 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், மேலும் ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் நிதி பெற முடியாது என்ற விதி உள்ளது. ஆனால், 7.97 லட்சம் பெண்கள் மோசடியாக தங்களது குடும்பத்தில் 03-வதாக ஒரு பெண்ணை சேர்த்து அவர்களுக்கும் பணம் வாங்கி வந்துள்ளனர். இதனால் ரூ.1,196 கோடி இழப்பு ஏற்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நிதியுதவியை 65 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மட்டுமே பெறலாம் என்ற விதியை மீறி, அந்த வயதையும் தாண்டிய வயதுடையவர்களும்  (2.87 லட்சம் பெண்கள்) இந்த நிதியை பெற்றதால் ரூ.431.7 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும்,  மேலும், கார் வைத்துள்ள 1.67 லட்சம் பெண்களும் இந்தத் திட்டத்தில் பலன்பெற்றுள்ளதும் அதிர்ச்சி தகவலை குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14000 men cheated by availing financial assistance scheme for women in Maharashtra


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->