மருதாணி இலையின் மருத்துவ பயன்கள் மற்றும் குணங்கள்...!
Medicinal uses and properties of henna leaves
பொடுகு மறைய:
- அரைத்த மருதாணி இலையுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து தலையில் பூசினால் பொடுகு நீங்கும்.
நுனிமுடியில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க:
- மருதாணியை பேக் போல தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.முடியின் நுனியில் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

முடி உதிர்வை தடுக்க:
- மருதாணி இலை கைக்கு மட்டும் நல்ல நிறத்தைக் கொடுக்க பயன்படுவதில்லை.இது முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்கவும் வல்லது.அதிலும் இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.
பாத எரிச்சல் குறைய:
- மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்.
இளநரை நீங்க:
- மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தய பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும்.இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும்.காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும்.குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
English Summary
Medicinal uses and properties of henna leaves