இம்யூனிட்டி தரும் இஞ்சித் துவையல்!!! கடைசியில் வெல்லம் சேர்க்க don't forget...!
Ginger THOVAIYAL that gives immunity Dont forget to add jaggery at the end
இஞ்சி துவையல்
தேவையான பொருள்:
பொருள் - அளவு
துருவிய இஞ்சி - கால் கப்
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய் துருவல் - அரை கப்
புளி - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
முதலில்,வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, இஞ்சி ஆகியவற்றை வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து அரைக்கவும். இறுதியாக கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
பிறகு துவையலை அம்மியில் அரைக்கும்போது சிறிதளவு வெள்ளம் சேர்த்துக்கொண்டால் இன்னும் சுவை அதிகரிக்கும்.மிகவும் சுவையாக இருக்கும். இந்த துவையல் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
English Summary
Ginger THOVAIYAL that gives immunity Dont forget to add jaggery at the end