பெயர் மாறியதால் ஆள் மாறி கைது: கொலை முயற்சி வழக்கில் 22 நாட்கள் சிறைவாசம்; 17 ஆண்டுகள் சட்ட போராட்டம்: இழப்பீடு கேட்டும் நபர்..! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசத்தில் பெயர் மாறியதால் வழக்கு ஒன்றில் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் 22 நாட்கள் சிறைவாசமும், 17 ஆண்டுகள் சட்ட போராட்டத்தை அனுபவித்துள்ள அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

உத்தரபிரதேசத்தில், 2008-ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அடிதடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மெயின்புரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக மனோஜ் யாதவ், பிரவேஷ் யாதவ், போலா யாதவ் மற்றும் ராம்வீர் சிங் யாதவ் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டம் பாய்ந்தது. 

இதில் ராம்வீருக்குப் பதிலாக, ராம்வீரின் மூத்த சகோதரர் ராஜ்வீர் சிங் யாதவின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால், அந்த ஆண்டு டிசம்பர் 01-ஆம் தேதி, ராஜ்வீர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்ந்து, ஆக்ராவில் உள்ள சிறப்பு குண்டர் சட்ட நீதிமன்றத்தில், தனது பெயர் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது எனக்கூறி ராஜ்வீர் சிங் மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு தொடர்பில் விசாரணை நடந்தது. இது குறித்த நபர் 22 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின் , விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படவில்லை. இது தொடர்பாக 17 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இதனால் அவர் சட்டப் போராட்டங்களை அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜ்வீர் சிங் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 55 வயதில் இறுதியாக வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மெயின்புரி நீதிமன்றம் ராஜ்வீர் சிங் யாதவை நிரபராதி என்று அறிவித்து, அலட்சியமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் 17 ஆண்டுகள் நீடித்த நிலையில்,  அவரது வாழ்வாதாரம், அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் அவரது மன அமைதி பறிபோயுள்ளது. ராஜ்வீர் சிங்கிற்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 17 ஆண்டுகள் சட்டப் போராட்டத்தை அனுபவித்த ராஜ்வீர் சிங் கூறியதாவது:

கடந்த 17 ஆண்டுகளாக வழக்கை எதிர்த்துப் போராடியுள்ளேன். அந்த நேரத்தில், யார் வழக்கு தொடர்ந்தார்கள் என்று கூட எனக்கு தெரியாது. அவர்கள் எனது பெயரை வழக்கில் சேர்த்து விட்டதால், எனக்கு வேலை செய்ய முடியவில்லை. என் குழந்தைகளுக்கு என்னால் படிக்க வைக்க முடியவில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். 

அத்துடன், கஷ்டப்பட்டு, தன்னுடைய மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், இதனால் அவருடைய மகன் படிப்பை விட்டு வெளியேற வேண்டிய நிலை உருவானதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இதைச் செய்த அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும்,  குறைந்தபட்சம், தான் அனுபவித்ததற்கு  இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man fought for 17 years in legal battle gets 22 days in jail for attempted murder after changing name in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->