ஹரித்துவார் அம்மன் கோவில் கூட்ட நெரில்! 6 பக்தர்கள் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநில ஹரித்துவாரில் உள்ள பிரசித்திபெற்ற மாதா மன்சா தேவி அம்மன் கோவில், ஆடி மாத சிறப்பு பூஜைகள் காரணமாக பக்தர்களால் நெரிசலாகியுள்ளது.

இந்த ஆலயம், வட இந்தியாவின் முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்றாகவும், நவராத்திரி காலங்களில் லட்சக்கணக்கான பெண்கள் வரும் வழிபாட்டு தலமாகவும் விளங்குகிறது.

தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். இன்று அதிகாலை, ஆடி மாத பூஜையைக் காண ஆவலுடன் வந்த பக்தர்கள் கோவிலில் பெரும்பான்மையாக கூடினர்.

அப்போது திடீரென ஒரு பக்தர் மீது மின்கம்பி பட்டதாக கூறப்படுகிறது. அவர் அலறியதும், மின்சாரம் தாக்குவதாக நினைத்த மக்கள் பீதி அடைந்து சிதறி ஓடினர். இதனால் கூட்ட நெரிசல் உருவானது.

இந்த குழப்பத்தில் மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு ஓட முயன்றதால், சிலர் தரையில் விழுந்தனர். மற்றவர்கள் அவர்களை மிதித்தபடி ஓடியதால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று நெரிசலை கட்டுப்படுத்தினர். உயிரிழந்தோர் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்தவர்களும் ஆம்புலன்ஸில் கையாண்டு தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ஹரித்துவார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Haridwar Amman temple devotees accident


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->