வரதட்சணை கொடுமை: இளம்பெண் அடித்து கொலை – கணவர் குடும்பத்தினர் தலைமறைவு!
Dowry violence Young woman beaten to death Husbands family absconding
உ.பி.யில் வரதட்சணை கொடுமை காரணமாக 28 வயது ஷமா என்பவர் கணவர் அனஸ் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கொலைக்குப்பின் 5 பேர் தலைமறைவாகி உள்ளனர்.
தமிழக மட்டுமில்லாது உலகம் முழுவதும் இந்த வரதட்சணை கொடுமையானது அதிகரித்துள்ளது என்று சொல்லலாம் ,சமீப காலமாக நாம் செய்திகளை பார்க்கும் போது வரதட்சனை கொடுமையானது ஆங்காங்கே நிகழ்ந்து வருவதை நாம் அரிஒம்.சமீபத்தில் திருப்பூரில் திருமணம் ஆகி 70 நாட்களே ஆன இளம்பெண் வரதட்சணை கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இதே போல பல்வேறு மாநிலங்களிலும் இந்த வரதட்சனை கொடுமைய எனது நடந்து வருது என்று சொல்லலாம் .சமீபத்தில் கேரளாவை சேர்ந்த இரண்டு பெண்கள் வரதட்சனை கொடுமையால் வெளிநாட்டில் தங்கள் கணவருடன் இருவரும் தனது உயிரை மாய்த்து கொண்டனர்.
இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் இளம் பெண்ணை வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொண்டு சம்பவம் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
கடந்த 2023ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ரத்தன்புரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஷமாவுக்கும் , அனஸ் என்ற நபருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமண வரதட்சணையாக ஷமா குடும்பத்தினர் ரூ. 1 லட்சம் கொடுத்துள்ளனர்.
இதனிடையே, திருமணத்திற்குப்பின் ரூ. 5 லட்சம் வரதட்சணை கொடுக்கும்படி ஷமாவை அவரது கணவர் அனஸ் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஷமாவை கணவர் அனஸ், மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் தொல்லை கொடுத்துள்ளனர். வரதட்சணை தராததால் ஷமாவை அனைவரும் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஷமா வீட்டிலேயே உயிரிழந்தார்.
இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து ஷமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஷமாவை அடித்துக்கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள அனஸ் உள்பட 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Dowry violence Young woman beaten to death Husbands family absconding