திருமுறை பாடலுடன் விழா மேடைக்கு வந்த மோடி.!!
prime minister modi come in gangai konda cholapuram
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. சுற்றுலா தளமான இந்தக் கோவிலுக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆடி மாதமும் மாமன்னன் ராஜேந்திரனின் பிறந்தநாள் விழா ஆடி திருவாதிரை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த வருடம் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, தெற்காசியா நாடுகள் மீது படையெடுத்த ஆயிரமாவது ஆண்டு விழா, பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணிகள் தொடக்க ஆண்டு விழா என்று முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன் படி இந்த விழா கடந்த 23-ந் தேதி தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டது.
இந்த விழாவின் நிறைவு நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதன் பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி கோவிலின் முக மண்டபம், அர்த்த மண்டபம், முன்மண்டபம், கோவில் மகா மண்டபத்தில் உள்ள தாமரை வடிவிலான நவக்கிரகம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த சிற்பங்களையும், கோவிலில் வெளிப்புறத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்களையும், ராஜேந்திர சோழனின் செப்பேடு பிரதிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் மூலவர் சன்னதிக்கு சென்ற அவர் பெருவுடையாரை தரிசனம் செய்த பின்னர் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சைவ சித்தாந்தம் மற்றும் சோழர் கால கோவில்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமர் மோடியை சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 25 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் வரவேற்றனர். பின்னர் 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் தேவாரப்பாடலை பாடினர்.
English Summary
prime minister modi come in gangai konda cholapuram