ராஜேந்திர சோழனை நினைவுகூறும் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
Rajendra Chola coin Prime Minister Modi released
ஆடி திருவாதிரை விழா நிகழ்வின் ஒரு பகுதியாக, கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராஜேந்திர சோழனை நினைவுகூறும் சிறப்பு நாணயத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்வு மூன்று முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி நடைபெற்றது. ஒன்று, ராஜேந்திர சோழனின் 1005ஆம் பிறந்த நாள் விழா. இரண்டாவது, கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்க தொடங்கிய 1000ஆம் ஆண்டு நினைவு. மூன்றாவது, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது ராஜேந்திர சோழன் முன்னெடுத்த படையெடுப்பின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா.
ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய விழா, ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்புடன் நிறைவு பெற்றது. பிரதமர் மோடி பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ததுடன், அங்கு அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.
நிறைவு விழாவின் முக்கிய அம்சமாக இசையமைப்பாளர் இளையராஜா நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ‘ஓம் சிவோஹம்’ பாடலை இசைத்தார். அவரின் திருவாசகம் சிம்ஃபனி நிகழ்ச்சி பார்வையாளர்களை சுவைபோன்ற அனுபவத்தில் ஆழ்த்தியது.
English Summary
Rajendra Chola coin Prime Minister Modi released