மாலை வீடு திருப்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!
TN Chief Minister MK Stalin health update
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஏழு நாட்களாக தலைசுற்றல் காரணமாக சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நாட்களில் அவரது குடும்பத்தினரும் அமைச்சர்களும் அவ்வப்போது நேரில் சென்று சந்தித்து நலமறிந்தனர்.
மருத்துவமனையில் இருந்தபோதும், அரசு நடவடிக்கைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார். கோப்புகளை ஆய்வு செய்து முக்கிய முடிவுகளை எடுத்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உடல் நலம் மேம்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6.15 மணியளவில் வீடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
TN Chief Minister MK Stalin health update