தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!!
bomb thread to tvk leader vijay house in chennai
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அரசியலிலும், நடிப்பிலும் மிகவும் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், இன்று காலை தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவலர் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் நடிகர் விஜய்யின் வீட்டிற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் முழுமையாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு ஏதும் இல்லாததால், வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பது தெரிய வந்தது.

இருப்பினும் போலீசார் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் ஒரே நபரா? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
bomb thread to tvk leader vijay house in chennai