ரெயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம் – அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை!
New change in train ticket booking new procedure from October 1
ரெயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், போலி முன்பதிவுகளைத் தடுக்கவும் ரெயில்வே துறை முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அக்டோபர் 1, 2025 முதல், பொது முன்பதிவு திறக்கும் முதல் 15 நிமிடங்களில் டிக்கெட் பதிவு செய்ய, பயணிகளின் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். இந்த நேரத்தில், ஆதாருடன் இணைக்கப்பட்ட IRCTC கணக்குகள் மூலமாக மட்டுமே டிக்கெட் பெற முடியும்.
தற்போது, தட்கல் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே ஆதார் கட்டாயமாக இருந்த நிலையில், இப்போது அதே விதி பொது ஒதுக்கீடு டிக்கெட்டுகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, நவம்பர் 15 அன்று பயணிக்க பொதிகை எக்ஸ்பிரஸ் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பினால், 60 நாட்களுக்கு முன், அதாவது செப்டம்பர் 16 காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். புதிய விதியின்படி, காலை 8.00 மணி முதல் 8.15 மணி வரை ஆதார் சரிபார்ப்பு செய்த பயனர்களுக்கே டிக்கெட் பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
ஆதார் இணைக்காத பயனர்கள் இந்த நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. காரணம், முதல் 15 நிமிடங்களிலேயே அதிகபட்ச தேவை உச்சம் எட்டுகிறது. இதனால் மெய்யான பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
New change in train ticket booking new procedure from October 1