டெல்லி புறப்பட்டார் இபிஎஸ்.!!
eps going to delhi
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதையடுத்து, அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை ஐந்து மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார். மேலும் மாலை 4 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க. முக்கிய தலைவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் டெல்லி பயணத்தால் நாளை மற்றும் நாளை மறுநாளுக்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.