24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
There is a possibility of rain in 24 districts Weather Research Center warns
இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.மேலும் இதன் காரணமாக இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
There is a possibility of rain in 24 districts Weather Research Center warns