தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்ததுடன், நாய்க்கடி சம்பவங்கள், ரேபிஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள், சாலை விபத்துகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை உருவாக்கி இருந்தன.

கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பரவலாக உள்ள இந்தப்பிரச்சனை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களை அதிகம் பாதிக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

தெரு நாய்களின் கட்டுப்பாடற்ற இனப்பெருக்கமும், தடுப்பூசி இல்லாத நிலையும் 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ரேபிஸ் என்ற கொடிய நோயைத் தீவிரப்படுத்துகின்றது. தெரு நாய்கள், வாகன ஓட்டிகள், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தனியாக நடமாடும் முதியவர்கள், பெண்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் என்று அனைவரையும் தாக்குகின்றது.

இந்த நிலையில், நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது, பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் இந்த கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என்றும், கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கருணைக் கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu government order Euthanasia to street dogs


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->