பிரதமர் மோடி வேலைவாய்ப்புத் திட்டம் - 1 ஆம் தேதி முதல் அமல்.!!
prime minister modi work scheme effective from augest 1st
பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக 'பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். தற்போது இந்த திட்டத்துக்கு அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து இந்த திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தத் திட்டம் ரூ.99 ஆயிரத்து 446 கோடி செலவில், 2 ஆண்டுகளில் 3.5 கோடி வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2047-ல் 'வளர்ந்த இந்தியா' என்ற கனவை நோக்கி 'விக்சித் பாரத்' திட்டத்தை முன்மொழிந்தார். அதன் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் அமைந்துள்ளது.

இந்த திட்டத்தில் ஊழியர்களை கவரும் விதமாக ஒரு லட்சத்துக்கு குறைவாக சம்பளம் பெறும் புதிய ஊழியர்களுக்கு பி.எப். கணக்கில் ஒரு மாத சம்பளத்தை 2 தவணைகளாக பிரித்து செலுத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இதேபோன்று முதலாளிகளை கவருவதற்காக நீடித்த வேலைவாய்ப்பு வழங்கும் முதலாளிகளுக்கு ஒரு ஊழியருக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கும் முறையும் இந்தத் திட்டத்தில் உள்ளது.
English Summary
prime minister modi work scheme effective from augest 1st