மகாராஷ்ட்ராவில் பாஜக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி! சிவசேனாவுக்கு அதிர்ச்சி! முன்னாள் முதல்வரின் விநோதமான திட்டம்!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பதால் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இந்த நிலையில் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ராவில் அசைக்க முடியாத பாஜக - சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்து, மனக்கசப்புகள் அதிகரித்து போனதால் மகாராஷ்ட்ராவில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதில் தொடர் குழப்பம் நீடிக்கிறது. சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசின் ஆதரவைப்பெற்று ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி, இந்துத்துவ கொள்கைகளில் தீவிரமான போக்கை கடைபிடிக்கும் சிவசேனாவுக்கு ஆதரவளிப்பதை விட, இந்துத்துவ கொள்கையில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி தன்னுடைய ஆதரவை வழங்கி ஆட்சியமைக்கலாம்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP and Congress alliance possible in Maharashtra


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal