மாணவியின் ஹிஜாப்பை அகற்றிய முதல்வர் நிதீஷ் குமார் - எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தொடர்ச்சியாகப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மனநலன் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

சர்ச்சைக்குரிய சம்பவம்:
பீகார் தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவர் ஒருவரின் ஹிஜாப்பை நிதீஷ் குமார் அகற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களில் அவர் செய்த பிற விசித்திரமான செயல்களையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வருகின்றன:

அதில், கடந்த மே மாதம், ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தலையில் பூத் தொட்டி வைத்தது. சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பாஜக வேட்பாளருக்கு மாலையை கழுத்தில் போட முயன்றது குறிப்பித்தக்கது ஆகும்.

இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், "நிதீஷ் குமாரின் மனநிலை நிலையாக உள்ளதா? அவர் தொடர்ந்து மாநிலத்தை வழிநடத்த முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ்: "பீகாரின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் பொது இடத்தில் இப்படிப்பட்ட இழிவான செயலைச் செய்வது வெட்கக்கேடானது. அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்று கண்டித்துள்ளது.

அகிலேஷ் யாதவ்: "இது வெட்கக்கேடானது, அவருக்குச் சரியாக ஆலோசனை வழங்கும் ஒரு ஆலோசகர் தேவை" என்று கூறியுள்ளார்.

மெஹபூபா முஃப்தி: "முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப்பை விலக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது அவரது முதுமையா அல்லது முஸ்லிம்களை அவமானப்படுத்துவது சாதாரணமாகிவிட்டதா? நிதீஷ் குமார் பதவியில் இருந்து விலக வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம்" என்று சாடியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bihar cm Nitish controversy hijab student


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->