இரவோடு இரவாக பாரதமாதா சிலை அகற்றம்.!! விருதுநகரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரதமாதா சிலை போலீஸ் பாதுகாப்புடன் இரவோடு இரவாக அகற்றம்.!

விருதுநகர் மாவட்டம் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பாஜக அலுவலகத்தை சில மாதங்களுக்கு முன்பு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நாட்டா கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் விருதுநகர் பாஜக அலுவலகத்தில் இதர கட்டிட பணிகளும் தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மிக பிரம்மாண்டமான கொடி கம்பம் பாஜக அலுவலகம் வாயிலில் அமைக்கப்பட்டது.

அந்த கொடி கம்பத்தின் கீழே நேற்று பாரதமாதா சிலையை பாஜகவினர் நிறுவினர். ஆனால் அந்த சிலை உரிய அனுமதி பெற்று வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா சிலையை அகற்ற முயன்றனர்.

அப்போது பாஜக அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவியது. பாஜகவினர் வருவாய் துறை அதிகாரிகளை தடுத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பாரத மாதா சிலை அமைக்க உரிய அனுமதி பெறும் வரை அதனை மூடி வைக்குமாறு வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் அறிகுறித்ததை ஏற்று பாஜகவினர் சிலையை மூடி வைத்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பாஜக அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த வருவாய் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி விருதுநகர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். உரிய அனுமதி பெற்ற பிறகு சிலை திரும்ப ஒப்படைக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முதல் விருதுநகர் மாவட்டத்தில் பாதயாத்திரை செல்ல உள்ள நிலையில் அரசு அதிகாரிகளின் இத்தகைய செயலால் விருதுநகர் மாவட்டத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat Mata statue removed from BJP office in Virudhunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->