விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிர்ச்சி சம்பவமாக மாறியது...! - பாஜக எம்.எல்.ஏ. நீரில் விழுந்த வீடியோ வைரல்...!
Awareness program turned into a shocking incident BJP MLAs video of falling into water goes viral
தலைநகர் டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தர் சிங் நெகி, யமுனை ஆற்றை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, யமுனை ஆற்றங்கரையில் நின்றபடி வீடியோ எடுக்க முயன்ற ரவீந்தர் சிங், திடீரென நிலைகுலைந்து ஆற்றுக்குள் விழுந்தார்.
அந்த தருணம் அங்கே இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடனே அவரது ஆதரவாளர்கள் ஆற்றில் குதித்து, ரவீந்தர் சிங்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் எந்தவித உயிர்ச் சேதமும் இல்லாமல் முடிந்தாலும், அதிரடியான அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் வைரலாகி, பல்வேறு மீம்களுக்கும், நகைச்சுவை வீடியோக்களுக்கும் காரணமாகி வருகிறது.
English Summary
Awareness program turned into a shocking incident BJP MLAs video of falling into water goes viral