அகந்தை! சினிமா வசனம் போல அரசியலில் விஜய் குழந்தைத்தனமாக நடக்கிறார்...! - சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்
Arrogance Vijay acting childishly politics movie dialogue Speaker Appavu strongly criticizes
நெல்லையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, பாஜக மற்றும் விஜயை நேரடியாக குறிவைத்து தாக்கினார்.இதுகுறித்து அவர் பேசுகையில்,"முதல்வர், பிரதமர் குறித்து பேசும் போது மரியாதை அவசியம்.
ஆனால், பாஜகவும் அமித் ஷாவும் பின்னணியில் இருக்கிற தைரியத்தில்தான் விஜய் அகந்தையுடன் பேசுகிறார். சினிமா வசனம் பேசுவது போலவே அரசியலிலும் பேசி வருகிறார். அது மக்களுக்கு பிடிக்காது” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “விஜய்க்கு ஓய் பாதுகாப்பு கேட்காமலே வழங்கப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நான் பிரசாரம் செய்ய வரும்போது பல நிபந்தனைகள் விதிக்கிறார்கள்.
பிரதமர், உள்துறை அமைச்சர் வந்தால் இவ்வாறு செய்வார்களா? சி.எம். சார் வந்து பார்த்து சொல்லட்டும். இதிலிருந்தே யார் இயக்குகிறார்கள் என்பது வெளிப்படுகிறது.
அரசியலில் விஜய்க்கு அரிச்சுவடு தெரியாது. குழந்தைத்தனமாகப் பேசுகிறார். இப்படியான அகந்தையை மக்கள் வெறுக்கிறார்கள்” என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.இது தற்போது அரசியல் வட்டாரங்களில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Arrogance Vijay acting childishly politics movie dialogue Speaker Appavu strongly criticizes