குவைத் சிறையில் கைது! ராமநாதபுரம் வேல்முருகன் மீட்பு நடவடிக்கை தேவை – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Arrested Kuwait prison Ramanathapuram Velmurugan needs rescue action TTV Dinakaran insists
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பகிர்ந்துள்ள புதிய தகவல்,குவைத் நாட்டில் பணியாற்றி வந்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா, பொட்டிதட்டி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் கடந்த நவம்பர் 15-ந் தேதி அந்நாட்டு காவல்துறையால் திடீரென கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 25 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணியாற்றிய வேல்முருகனை தொடர்பு கொள்ள முடியாமலும், எதை செய்ய வேண்டும் என்பதில் குழப்பத்திலும் கடும் கவலையிலும் உள்ளனர்.டி.டி.வி. தினகரன் குறிப்பிட்டிருப்பதாவது,இந்திய தூதரகம் உடனடியாக வேல்முருகனை குவைத் சிறையிலிருந்து பாதுகாப்புடன் மீட்டு, தாயகத்திற்கு அழைத்து வர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Arrested Kuwait prison Ramanathapuram Velmurugan needs rescue action TTV Dinakaran insists