சேலத்தில் பதற்றம்..! மல்லு கட்டிய ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்..!! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.!!
Argument between OPS and EPS supporters in Salem
சேலம் மாவட்ட மாநகர் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாநில நிர்வாகிகள் வைத்தியலிங்கம், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு முன்பு பேனர்கள் மற்றும் அதிமுக கொடிகளை நட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என கூறி கொடியை அகற்றினர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உண்டானது. இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நிர்வாகிகள் சேலம் மாநகர உதவி ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
English Summary
Argument between OPS and EPS supporters in Salem