முதலமைச்சர் உடல்நலம் குறித்து அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை!
Apollo Hospital releases statement on Chief Ministers health
அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அவ்வகையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அவர்களின் சகோதரர் மு.க.அழகிரி அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது,"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.
இதய துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாக முதலமைச்சருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இதய சிகிச்சை மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், 2 தினங்களில் முதலமைச்சர் தனது இயல்பு பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Apollo Hospital releases statement on Chief Ministers health